சட்டச் சீரமைப்பு (எல்ஆர்எ), அரசு அனைத்துத் தரப்பினர்களின் கருத்தையும் பெற வேண்டும், குலா

 

kulaநான்கு நாட்களுக்கு முன்பு, புத்த, கிறிஸ்த்துவ, இந்து, சீக்கிய மற்று தாவ் ஆகியவற்றின் ஆலோசனை மன்றத்தின் செயலாளர் பிரேமதிலகா செரிசெனா அரசாங்கம் முன்மொழிந்துள்ள சட்டச் சீரமைப்பு (திருமணம் மற்றும் மணவிலக்கு) சட்டம் 1976 (எல்ஆர்எ) ஐ பார்க்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை என்று கூறியுள்ளார்.

நேற்று, கெராக்கான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எண்டி யோங் அச்சட்டத்திற்கான திருத்தங்கள் சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் இலக்கை அடைய முடியாது என்று கூறியுள்ளார்.

அச்சட்ட வரைவை கவனமாக ஆராய்ந்த பின்னர் அதனை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் அதில் இன்னும் பல தவறுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் போதிய அரசியல் திண்மை இல்லாததால் இச்சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வருவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

இப்போது, தேவையான சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் விவகாரங்கள் அனைத்தையும் திருப்திகரமாகவும் நிரந்தரமாகவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு, முதலாவதாக செய்ய வேண்டியது அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தைப் பெற வேண்டும்.

இந்நிலையில், அனைத்து சமய ஆலோசனை மன்றத்தின் கருத்தை இன்று வரையில் பெறாமல் இருப்பது குழப்பமாகவும் அதே சமயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.

என்ன நடந்தது? அவர்களின் கருத்தைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு தடையாக இருப்பது என்ன?

yongகெராக்கானின் எண்டி யோங் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து அவர் அரசாங்கம் முன்மொழிந்துள்ள திருத்தங்களைப் படித்திருக்கிறார். ஆக, அவர் எப்படி திருத்தங்களைப் பெற்றார்?

அவர் அந்த திருத்தங்களை கெராக்கான் அமைச்சர் மா சியு கியோங்கிடமிருந்து பெற்றாரா அல்லது அரசாங்கம் பிஎன் பங்காளித்துவக் கட்சிகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்கிறதா? ஏன் அவர்கள் இவ்வளவு ரகசியம் காக்கிறார்கள்?

பின் கட்சிகளின் ஆலோசனையை மட்டும் பெறுவது தவறாகும் என்பதோடு போதுமானதாகவும் இருக்காது.

அரசாங்கம் அனைத்து தரப்பினர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டும்.