வயதான பெண்மணி அடிக்கப்பட்டதால் முதியோர் இல்லம் மூடப்படுகிறது

oldமலாக்கா   அரசு    கெலேபாங்கில்   செயல்பட்டு  வரும்   முதியோர்  இல்லத்தை   மூடுமாறு   பணித்துள்ளது.  அந்த  இல்லத்தின்   பராமளிப்பாளர்  ஒரு   மூதாட்டியை   அடிப்பதைக்   காண்பிக்கும்   காணொளி   ஒன்று   சமூக   வலைத்தளங்களில்    வலம்   வந்ததை     அடுத்து    இந்நடவடிக்கை    மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்து  நாளில்   அந்த   இல்லத்தை    மூடிவிட   வேண்டும்    என   உத்தரவிடப்பட்டிருப்பதாக    மாநில   மகளிர்,  குடும்ப    மேம்பாட்டுக்  குழுத்    தலைவர்   லத்திபா   ஒமார்    கூறினார்.

காணொளி   மட்டுமல்லாமல்   அது   ஒரு   பதிவு   செய்யப்படாத     இல்லம்  என்பதும்   அது   மூடப்படுவதற்கான   காரணமாகும்  என்று   லத்திபா    சொன்னார்.

“மலாக்காவில்   73  பதிவு   செய்யப்பட்ட   பராமரிப்பு   இல்லங்கள்   உள்ளன. 20க்கும்   குறைவானவை   இன்னும்   சமுக   நலத்துறையில்   பதிந்து  கொள்ளாமலிருக்கின்றன.

“இந்த   முதியோர்   இல்லத்துக்கு    2015-இலேயே   பதிவு   செய்து  கொள்ளுமாறு   ஆலோசனை   கூறப்பட்டது.  ஆனால்,   அது   இன்னும்   அதைச்   செய்யாமலிருக்கிறது”,  என்றாரவர்.