அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற நினைத்தால் பிஎன் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ கூறினார்.
“14வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற பிஎன் பங்காளிக் கட்சித் தலைவர்கள் ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும்.
“அவமதிப்பது, கேலி செய்வது, ‘பெரிய அண்ணா’ தோரணையில் ஆணவமாக நடந்துகொள்வது கூடவே கூடாது”, என இன்று கோலாலும்பூரில் கெராக்கான் பேராளர் மாநாட்டில் டான் கூறினார்.
ஒரு பெரிய குடும்பத்தின் உறவுபோல் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான உறவைப் பேணிக் காக்க வேண்டும் என்றாரவர்.
பிஎன்னில் எழும் சச்சரவுகள் எதிரணியினருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்து விடும்.
நெருக்கடிமிக்க தற்போதைய அரசியல் நிலைமையில் உள்குத்து வேலைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
நம்பிக்கை நாயகன் அந்த நேரத்தில் எதையும் அடமானம் வைப்பான். எந்த வாக்குறுதியையும் கொடுப்பான்– எல்லாம் முடிந்த பின் நாமம் தான்.
அம்னோ காரன் செய்யுறது உள்குத்து வேலை மட்டும் இல்லம்மா… பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற வேலையும் செய்வான்..?