மலேசிய விமான நிறுவனம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை வந்திருப்பதால் கஜானா நேசனல் பெர்ஹாட்டிடமிருந்து கூடுதல் நிதியுதவி அதற்கு இனி தேவைப்படாது என்று அதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெல்லு கூறினார்.
இவ்வாண்டு நவம்பரிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்வரை நிறைய முன்பதிவுகள் செய்யப்பட்டிருப்பது அந்த நம்பிக்கையைத் தந்துள்ளது.
“நவம்பர், டிசம்பர் விற்பனைப்பதிவுகள் நன்றாக உள்ளன. ஜனவரியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்வரை உள்நாட்டுச் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
“கூடுதல் பணயுதவி கேட்கும் எண்ணம் கிடையாது”, என்றாரவர்.
MAS – ஊழல் இல்லாமல் நடத்தப்பட்டால் நஷ்டத்தில் அல்லோலப்பட தேவையே இல்லை. எல்லாம் ஊழல்- எல்லாவற்றிலும் ஊழல்– யாரால் என்று நான் கூற தேவை இல்லை– அம்னோ நாதாரிகள் சம்பந்தப்பட்டாலே எல்லாமே நாறிவிடும்–எவ்வளவோ உதாரணங்களை நான் மேற்கோள் காட்டமுடியும்–ஆனாலும் அம்னோ ஆட்சியில் இருக்கும்வரை ஒன்றும் நடக்காது. அதிலும் மலாய்க்காரன் கொள்ளை அடித்தால் அது மலாய்க்காரனை பணக்காரன் ஆக்குவது– புதிய பொருளாதார கொள்கை. முற்று புள்ளி.
மிக சரியாக சொன்னிர்கள் தமிழ்,இவனுங்க கிடட மாட்டி இந்த நாடு நாசமாகிறது.
நம்பிக்கையைத் தந்துள்ளது என்றாலே அம்னோ காரன் உள்ளே வந்து விடுவான்! அப்புறம் என்ன நம்பிக்கை?