அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-இன் 2015ஆம் ஆண்டுக் கணக்குகளை அந்நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான டிலோய்ட்-டால் முடிக்க இயலவில்லை அதனால்தான் அது விலகிக் கொண்டது. இதனை 1எம்டிபி தலைவர் அருள் கந்தசாமி தெரிவித்தார்.
அருள், நேற்றிரவு மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளக்கமளிப்பு நிகழ்வு ஒன்றில் பேசினார். கணக்காய்வுக்குத் தேவையான ஆவணங்களை போலீசார் எடுத்துச் சென்று விட்டதாக அவர் சொன்னார்.
“2015 ஜூலையில் போலீசார் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதால் கணக்குகளைத் தணிக்கை செய்ய முடியவில்லை”.
கணக்காய்வு செய்ய முடியாத காரணத்தால் அந்நிறுவனம் விலகிக் கொள்வதாகக் கூறிவிட்டது என்றாரவர்.
மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த விளக்கமளிப்பு நிகழ்வுக்கு தொடர்பு, பல்லூடக அமைச்சின் சிறப்பு விவகாரப் பிரிவு (ஜாசா) ஏற்பாடு செய்திருந்தது.
திருட்டை மறைக்க மேலும் ஒரு கூட்டம்!
நீங்கள் சொல்லுகின்ற காரணம் வேறு எந்த நாட்டிலும் நடக்காது என்பது மட்டும் உண்மை!
ஹ,ஹ, ஹ அருள் நல்ல பதில், ஆகா அரசாங்க பாரிசான் திருட்டுத்தனத்திலிருந்து தப்பிக்க என்னம்மா செட் ஆப் பன்னூறீங்க? இது எல்லாம் பழைய கதை ஐயா! மைக்கா ஓல்டிங் கணக்கு விசயத்தில் முதலில் அலுவலகத்தில் திருடும் அடுத்து போலீசார் கோப்புகளை அள்ளிக்கிட்டு போனதையும் நாடே அறியுமே. அப்புரம் எப்படி மைக்காவில் கணக்கு வரும். அதே நிலைதான் 1 எம். டி.பிக்கு ஆக, கணக்கே வராது, மக்கள் வாயில் வடையா!ஹ ஹ ஹ