ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடைப்பட்டிருக்கும் மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான அலவன்ஸ் தொகை அக்டோபர் 18க்குள் கொடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு கூறியது.
“அமைச்சு நாடு முமைமையும் 15 மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயிலும் 21,000 மாணவர்களுக்கு அக்டோபர் 18க்குள் அலவன்ஸ் தொகை கிடைப்பதை உறுதிப்படுத்தும். அவர்களின் சேமிப்புக் கணக்குகளில் அது சேர்ப்பிக்கப்படும்”, என்று அமைச்சின் அறிக்கை ஒன்று கூறியது.
கடந்த மாதத்திலிருந்து அலவன்ஸ் கிடைக்காததால் லாபுவான் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காசின்றித் தவித்து போனார்கள். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு அன்றாடம் உணவளித்து கைகொடுத்தது.
-பெர்னாமா