முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ், மூசா ஹசான், குற்றச்செயல் கும்பல்கள் அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டுக்கொள்ளாதிருக்க மாதந்தோறும் ரிம2மில்லியன் கொடுக்க முன்வந்தார்கள் எனக் கூறினார்.
“அக்கும்பல்கள் சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருள் விற்பனை, பெரும் வட்டிக்குக் கடன் கொடுப்பது போன்ற அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர இடம்கொடுத்தால் மாதம் ரிம2 மில்லியன் ரிங்கிட் கொடுக்க முன்வந்தார்கள்”. நேற்று அரசாங்கப் பணியாளர்களுக்கான நேர்மை மீதான கருத்தரங்கொன்றில் பேசிய மூசா இவ்வாறு கூறினார் என த ஸ்டார் தெரிவித்தது.
ஆனால், அந்த முன்னாள் போலீஸ் படைத் தலைவர் அதை ஏற்காதது மட்டுமல்ல அந்தக் குற்றக்கும்பலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் முற்பட்டார்.
அதன் விளைவாக குற்ற உலகில் பெருந் தலைகள் பலர் கைதானார்கள்.
மற்ற ஐஜிபிகளிடமும் இதேபோன்று பேரம் பேசப்பட்டது உண்டா என்று வினவியதற்கு அது தமக்குத் தெரியாது என்றாரவர்.
“நான் ஐஜிபியாக இருந்தபோது பரிசுக்கூடைகளக்கூட பெற்றுக்கொள்ள மாட்டேன். உயர் அதிகாரிகள் அவர்களின் கீழ் பணியாற்றுவோருக்கு நல்ல முன்மாதிரியாக இருந்து அவர்களுக்கு நேர்வழியைக் காண்பிக்க வேண்டும்”, என்று மூசா கூறினார்.
அப்படினா நீங்கள் இதுவரைக்கும் ஒண்ணுமே ‘வாங்களனு’ அர்த்தமா ? நீங்களும் UMNO ஆட்சியின் பொது போலீஸ் தலைவராக இருந்தவர்தானே ? அப்பொழுதெல்லாம் நீங்கள் உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், லஞ்சம்-இன்மை …. இப்படித்தான் வாழ்ந்தீர்களா ?
இதிலிருந்து தெரிய வில்லையா? குற்றவாளிகளுக்கும் காவலுக்கும் உள்ள உறவு என்ன என்பதை ?
இப்போது தெரிய வேண்டும் ஏன் குற்றவாளிகளை பிடிக்கமுடிவதில்லை என்று. திருடர்களும் ஊழல்வாதிகளும் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும்? மலேஷியா நல்ல உதாரணம். வெட்கம் கெட்ட ஈன ஜென்மம் அதை பற்றியும் பேசுகிறது.
இந்த உண்மை நீர் அப்போ சொல்லாமல் காசு வாங்கி விட்டு இப்போ உண்மை சொல்லி நல்லவன் நாடகம் ஆடுகிறாய் .என்னெதே சொல்ல?