பிகேஆர் மற்றும் டிஏபி-இன் சிலாங்கூர் கிளைகள் தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்புக்கு எதிராக 50க்கு மேற்பட்ட ஆட்சேபனைகளைத் தேர்தல் ஆணையத்திடம் இன்று தாக்கல் செய்தன.
தேர்தல் தொகுதிச் சீரமைப்பு செய்யப்பட்டதில் நியாயமில்லை என்றும் அது அரசியல் சார்புள்ளது என்றும் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் இனங்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்றும் அவை கூறின.
சிலாங்கூரின் எல்லாப் பகுதிகளுமே தேர்தல் தொகுதி எல்லைச் சீரமைப்பால் பாதிக்கப்படும் என்பதை அம்பாங் எம்பி சுரைடா கமருடின் சுட்டிக்காட்டினார்.
ஒரு குறிப்பிட்ட தொகுதியில் குறிப்பிட்ட இனம்தான் பெரும்பான்மையாக இருக்கும் என்பதால் ஒற்றுமை பாதிப்புறும் என்றார்.
ஆட்சேபனை ஆட்சேபனை ஆகவே இருக்கும்– அவ்வளவுதான்.
எல்லாம் BN வெச்ச ஆச்சி .