உலகில் மிக நீண்ட காலத்திற்கு ஆட்சியிலிருந்த 88 வயதான தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுலியாதேஜ் இன்று மருத்துவமனையில் காலமானார் என்று அரண்மனை அறிக்கை தெரிவித்தது.
1946 இல் சிம்மாசனமேறிய மன்னர் பூமிபோலின் மரணம் தாய்லாந்து மக்களுக்கு பேரிடியாகும். பல்லாண்டுகளாக தாய்லாந்தில் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் துரித மேம்பாடு ஆகியவற்றின் போது மன்னர் பூமிபோல் உறுதியான நிலைப்பாட்டின் தூணாக கருதப்பட்டார்.
அவரின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை அரண்மனை அறிவிக்கவில்லை.
மக்களால் போற்றப் பட்ட மன்னனின் ஆன்மா சிவலோகமடைய எம்பிரானை இறைஞ்சுகிறோம்.