அம்னோவிலிருந்து விலகி புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வில் சேர்வோர் தாராளமாக சேரட்டும் அது குறித்து அம்னோ கவலைப்படவில்லை என்கிறார் அதன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.
“நாங்கள் கவலைப்படவில்லை. எஸாம் முகம்மட் நோர் (பெர்சத்துவில்) சேர்வது பற்றி எங்களுக்குக் கவலையில்லை”, என இன்று புத்ரா ஜெயாவில் தெங்கு அட்னான் கூறினார்.
முன்னாள் செனட்டரான எஸாம் முகம்மட் நோர் இம்மாதத் தொடக்கத்தில் அம்னோவிலிருந்து விலகினார். அவர் பெர்சத்துவில் சேரவிருப்பதாகக் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார்.
அது தவிர, இன்று பின்னேரம் அம்னோ இளைஞர் தலைவர்கள் சிலர் அம்பாங்கில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் பெர்சத்துவில் சேரப்போவதாக அறிவித்துள்ளார்கள். அது குறித்தும் தெங்கு மன்சூரிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர், விரும்பும் கட்சியில் சேர்வது அவர்களின் உரிமை என்றார்.
“அது அவர்களின் உரிமை. பிபிபிஎம் (பெர்சத்து) , இருக்கிறதே Parti Pecah Melayu Berhad அல்லது Parti Pemecah Melayu Bersatu அல்லது வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து அழைத்துக் கொள்ளுங்கள் அது அதிருப்தியாளர்களைக் கொண்ட ஒரு கட்சி. அவர்களல் அம்னோவிலிருந்து எதையும் சாதிக்க முடியவில்லை.
“அதனால் விலகுகிறார்கள். ஆனால், பல்லினக் கூட்டணியான பிஎன்தான் நாட்டின் முன்னேற்றத்துக்காக சொன்னதைச் செய்யும், மக்களுக்குச் சேவை செய்யும் கட்சி என்பதை மக்கள் அறிவார்கள்”, என்றாரவர்
கவலைப்படவில்லயென்றால் அதை padri ஏண்டா பண்ணி பேசுகிறாய் உள்ளுக்குள்ள உன் தம்பி ஊசல் ஆடி பயந்து நீ உளறி ய வார்த்தை என்று எல்ல்லாருக்கும் தெரியும்டா டோய்