நஜிப்: ஜிஎஸ்டியைக் குறைப்பதா? பொருளாதாரம் முடங்கிவிடும்

najibபொருள்,   சேவை வரி(ஜிஎஸ்டி)யை   ஆறு  விழுக்காட்டிலிருந்து   மூன்று  விழுக்காடாகக்   குறைக்க    வேண்டும்      என்று   கூறப்பட்டதைப்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்  நிராகரித்தார்.

ஜிஎஸ்டியால்  உள்நாட்டுப்  பயனீட்டளவு   குறைந்துள்ளது   என்று   கூறி     அதைக்  குறைக்க   வேண்டும்   என்று   லியு   சின்   தோங்(டிஏபி-  குளுவாங்)  நாடாளுமன்றத்தில்    ஒரு  பரிந்துரையை   முன்வைத்தார்.

“இது   எதிரணியினர்   எதிர்மறையான    கருத்து”,  என    நஜிப்   பதிலளித்ததும்    பிஎன்   நாடாளுமன்ற    உறுப்பினர்கள்   கைதட்டி   ஆரவாரம்     செய்தார்கள்.

“ஜிஎஸ்டி   இல்லையேல்   மலேசியப்   பொருளாதாரம்    முடங்கிப்   போகும்”,  என்று  பிரதமர்   குறிப்பிட்டார்.