அடினான்: சரவாக் இழந்த அதிகாரத்தைத் திரும்பப் பெற சட்டத்திருத்தம் கொண்டுவர முயலும்

sarawakசரவாக்    எம்பிகள்,   1963ஆண்டு    மலேசியா   ஒப்பந்தம்     வழங்கும்   அதிகாரத்தைத்   திரும்பப்  பெறுவதற்காக     கூட்டரசு   அரசமைப்புக்குத்   திருத்தம்   கொண்டுவர   முயல்வார்கள்.

“அது  தேவையென்றால்”   மாநில  எம்பிகள்   நாடாளுமன்றத்தில்   அந்தத்     திருத்தத்தைக்  கொண்டுவர   முயல்வார்கள்    என  சரவாக்   முதலைமைச்சர்     அடினான்  சதேம்   கூறியதாக  த   போர்னியோ   போஸ்ட்   தெரிவித்தது.

1976-ல்    கூட்டரசு   அரசமைப்பில்     கொண்டுவரப்பட்ட   ஒரு    திருத்தம்,  சாபாவையும்    சரவாக்கையும்   மற்ற    மாநிலங்களுக்கு    இணையாக  மாற்றி     விட்டது  என்றாரவர்.

அதற்கு   முன்பு   மலேசியா  ஒப்பந்தப்படி   சரவாக்   சம  அதிகாரம்     கொண்ட    பங்காளி   நாடாக    இருந்தது.

“அதன்பின்னர்  அதன்   அதிகாரங்கள்   குறைக்கப்பட்டன.  அவை   திரும்பக்   கிடைக்க   வேண்டும்   என   விரும்புகிறோம்”,  என்றவர்   கூறியதாக     அறிவிக்கப்பட்டுள்ளது.