அமைச்சர்கள் டிஓஜே கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியதில்லை- பண்டிகார்

pandikar1எம்டிபி-இல்    நிகழ்ந்ததாகக்    கூறப்படும்    ஊழல்   தொடர்பில்    அமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)  தொடுத்துள்ள  வழக்கு    குறித்த   கேள்விகளுக்கு  மலேசிய   நாடாளுமன்றத்தில்      பதிலளிக்க    வேண்டிய   அவசியமில்லை    என்று   மக்களவைத்    தலைவர்   பண்டிகார்   அமின்  மூலியா    இன்று   அறிவித்தார்.

“வழக்கு   இன்னும்   நீதிமன்றத்தில்  உள்ளது……எனவே   அதைப்   பற்றி  விவாதிப்பது    நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்……..அமைச்சர்   பதில்   அளிக்க   வேண்டியதில்லை”,  என   பண்டிகார்   கூறினார்.

பண்டிகார்   அறிவிப்பதற்கு    முன்பே,   பிரதமர்துறை    அமைச்சர்   அசலினா   ஒஸ்மான்,   நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்    என்று  கூறி   1எம்டிபி   குறித்த   கேள்விகளுக்குப்    பதிலளிக்க    மறுத்திருந்தார்.

லிம்   கிட்   சியாங் டிஏபி –  கேளாங்  பாத்தா   வெளிநாட்டு    வழக்கு   பற்றி    இங்கு   விவாதிப்பது   எப்படி    நீதிமன்றத்தை    அவமதிப்பதாக   இருக்கும்   என்றும்       அப்படி   ஒரு   விதி   இருந்தால்    அதை மாற்றுவது      குறித்து   ஆலோசிக்கலாமா    என்றும்     கேட்டிருந்தார்.

கோபிந்த்  சிங்  டியோ (டிஏபி-  பூச்சோங்)வும்    நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்     என்று   அறிவிப்பதற்குமுன்    பண்டிகார்   அமெரிக்க     நீதிமன்ற    ஆவணங்களை  ஆராய்ந்து    பார்த்தாரா   என்று   வினவினார்.

அதற்கு   பண்டிகார்,   தாம்   தம்  முடிவை   மாற்றிக்கொள்ளப்    போவதில்லை   என்றும்   ஒரு   வேளை  அதன்   தொடர்பில்    தனிநபர்    தீர்மானம்   கொண்டுவரப்பட்டால்     மறு ஆய்வு   செய்யக்கூடும்  என்றும்   சொன்னார்.