நீதிபதிகளும் நீதித்துறை அதிகாரிகளும் நீதித்துறையின் நேர்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எப்போதும் பாடுபட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார்.
நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும் அப்போதுதான் அவர்கள் நீதித்துறையையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிப்பார்கள் என்று சுல்தான் கூறினார்.
“அந்த வகையில், நீதிபதிகள் குறிப்பிட்ட தரப்புகளின் செல்வாக்குக்கு ஆளாகாமலும் குறைகூறப்படும் என்று அஞ்சாமலும் அரசமைப்புக்கும் சட்டத்துக்கும் உள்பட்டு முறையான தீர்ப்புகளை வழங்க வேண்டும்.
“மக்களுக்கு நீதித்துறையின் நேர்மையின்மீதும் சுதந்திரத்தின்மீதும் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாட்டில் சுதந்திரத்தையும் அமைதியையும் மேம்பாட்டையும் சட்ட ஆளுமையையும் நிலைநிறுத்த முடியும்”, என இன்று கிள்ளான் நீதிமன்றத் திறப்புவிழாவுக்குத் தலைமை ஏற்ற சுல்தான் கூறினார்.
நடப்பதை சொன்னால் நல்லது– பதவியில் உட்கார்ந்து இருப்பது எல்லாமே அம்னோ குஞ்சுகள் -மக்கள் பணத்தில் படித்து அம்னோவுக்கு உழைக்கும் – தியாகிகள். அவன்களாவது நீதியையாவது காப்பாற்றுவதாவது. எத்தனை மலாய்க்காரன் அல்லாதவர்கள் நீதிபதியாக உட்கார்ந்து இருக்கின்றார்கள்?
யாரு இதை கேட்கப் போகின்றார்கள்? பணத்திற்கு மிஞ்சியதா நீதி?
UMNO வுடன் நடனமாடியவரை தாக்குகிறாரோ சுல்தான்.