சபாவில் சமீபத்தில் பெர்சே இயக்கத்திற்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் தொல்ல கொடுத்து அச்சுறுத்தி வந்ததாக போலீசார் மீது டிஎபி நாடாளும்னற தலைவர் லிம் கிட் சியாங் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோத்தா மருடுவில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ததற்காக பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கைது செய்யப்பட்டது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறிய லிம். துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது ஒரு சட்டப்பூர்வமான, சட்டப்படி நியாயமான செயலாகும் என்றார்.
இன்னும் படுமோசமான போலீஸ் நடத்தை பொதுமக்கள் பெர்சே துண்டுப் பிரசுரங்களை எடுத்துக்கொண்டதற்காக அவர்களை மிரட்டுவதாகும் என்றார்.
துண்டுப் பிரசுரங்களை எடுத்துக் கொண்டவர்களின் அடையாள அட்டையின் எண்களைக் குறித்துக் கொள்வதும், அவர்களைக் கைது செய்யப் போவதாக மிரட்டுவதும் போலீசார் சட்டத்திற்கு முரணாக தொல்லை கொடுத்தல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தல் ஆகும் என்று லிம் மேலும் கூறினார்.
போலீசாரின் இது போன்ற நடத்தை போலீஸ் மீது மக்கள் வைத்துள்ள நல்லெண்ணத்தைப் பாதிக்கும் என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்காக, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களைக் கண்டிக்க வேண்டும் என்று லிம் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் நடக்கும் அநியாயங்களை தடுக்கும் கடமை போலீஸாருடையது. இத்தகைய நற்பணியை, போலீசார் செய்ய வேண்டிய வேலையினை பெர்சே செய்கிறது. அத்தகையோரை போலீசாரே துன்புறுத்துவதா? நம் நாட்டில் என்னய்யா நடக்கிறது? திருடர்கள் ஆட்சி செய்கிறார்களா?
காவல் யாரை காவல் செய்கின்றது புரியுதே– எல்லாமே மூன்றாம் உலக அடக்குமுறை. சரி சம நிகருடன் இந்த நாதாரிகளால் செயல் பட முடியுமா?
ஐயா சிங்கம் அவர்களே இப்போதுதான் புரிந்ததா? இது அன்றிலிருந்து நடக்கிறது– என்ன- எல்லாம் சிறிதளவில் ஆரம்பித்து இன்று ஆலமரமாய் வளர்ந்து இருக்கிறது அவ்வளவுதான்–