சிலாங்கூரில் உத்தேச தேர்தல் தொகுதி எல்லைகளின் சீரமைப்பு நடவடிக்கைகளால் பாரிசான் நெசனல் (பிஎன்) மேலும் 11 சட்டமன்றத் தொகுதிகளை வென்று மாநில ஆட்சியைக் கைப்பற்ற நல்ல வாய்ப்பிருப்பதாக போலிடிவிட் தேர்தல் கணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது.
56 சட்டமன்றத் தொகுதிகளில் 17இலிருந்து 23 தொகுதிகளை பிஎன் கைப்பற்றலாம் என அவ்வறிக்கை கூறியது. 2013 தேர்தலில் பிஎன் 12 இடங்களை மட்டுமே வென்றது.
இதில் பாஸ் கட்சி கூடுதல் இடங்களை இழக்கும் கட்சியாக இருக்குமாம். குறைந்தது எட்டு சட்டமன்றத் தொகுதிகளை அது இழக்கக்கூடும்.
பாஸின் சட்டமன்ற உறுப்பினர் இருவர் அமனாவுக்குக் கட்சி மாறியதை அடுத்து அதற்கு இப்போது சட்டமன்றத்தில் 13 இடங்கள்தான் உள்ளன.
“தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தப்படுவதால் பிஎன் கூடுதல் இடங்களை வெல்லும் வாய்ப்பும் கைவசமுள்ள இடங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பும் அதிகரித்துள்ளன”, என அவ்வறிக்கை கூறுவதாக மலாய் மெயில் ஆன்லைன் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிலாங்கூரில் பக்காத்தான் ஆட்சியை இழக்கப்போவது தவிர்க்கமுடியாதது. அப்படி ஆட்சியை இழக்குமேயானால், வாக்களிக்கும் மக்கள் தான் அதற்கு முழுப் பொறுப்பேற்கவேண்டும்.
தில்லு முல்லு பண்ணாவிட்டால் ஓர் இடம் கூட கிடைக்காது என்று ‘அவர்களுக்கும்’ தெரியும்…
தேர்தல் தொகுதி எல்லைகள் அம்னோவுக்கு ஆதரவாக இருப்பதால் ஒரு வேளை இது சாத்தியப்படலாம்!
சிலாங்குர் மாநிலம் மீண்டும் பாரிசன் கைப்பற்ற மக்கள் இடம் அளிக்க கூடாது.அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் நம்பிக்கை கூட்டனி சிலாங்குர் மாநிலத்தை தன்வசம் இருக்க மக்கள் உறுதியாக இருப்பது அவசியம். இல்லேயேல் மீண்டும் வேதாளம் முருங்கை கதை உருவாகும் நிலை வரலாம்.