2014 தொடங்கி இவ்வாண்டு செப்டம்பர்வரை அதிகாரிகள் அரசாங்க மற்றும் அரசுதொடர்புடைய நிறுவனங்களின்(ஜிஎல்சி) பணியாளர்கள் 1,037 பேரிடமிருந்து மொத்தம் ரிம171.77 மில்லியனைக் கைப்பற்றியுள்ளனர்.
இதனைத் தெரிவித்த பிரதமர்துறை அமைச்சர் பால் லாவ், 2014இல் 225 அரசு அதிகாரிகளும் ஜிஎல்சி பணியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரிம113.4 மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.
கடந்த ஆண்டில் 398 அரசு அதிகாரிகளிடமிருந்தும் ஏழு ஜிஎல்சி ஊழியர்களிடமிருந்தும் ரிம30.78 மில்லியன் கைப்பற்றப்பட்டது.
இவ்வாண்டில் ஜனவரிக்கும் செப்டம்பருக்குமிடையில் 398 அரசு அதிகாரிகளும் 17 ஜிஎல்சி பணியாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடமிருந்து ரிம27.55 மில்லியன் பிடிபட்டது.
நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் லாவ் இந்த விவரங்களை வெளியிட்டிருந்தார்.
நமது பிரதமரைத் தவிர மற்ற அரசாங்க ஊழியர்கள் எல்லாம் கைப்பற்றுவதிலேயே கண்ணாய் இருக்கின்றனர்!