கடந்த ஆறாண்டுகளாக ஆண்டுதோறும் 150 மருத்துவ நிபுணர்கள் சுகாதார அமைச்சிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரிக்கும் செப்டம்பருக்குமிடையில் 128 நிபுணர்கள் வேலையிலிருந்து விலகியதாகவும் கடந்த ஆண்டில் 124 பேர் விலகிக் கொண்டார்கள் என்றும் சுகாதார துணை அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்யா கூறினார்.
“அவர்களின் தொடர்ந்த வெளியேற்றம் மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு ஒரு காரணமாகும்”, என இக்மால் ஹிஷாம் அப்துல் அசீசின் (பிஎன் -தானா மேரா) கேள்விக்குப் பதிலளித்தபோது டாக்டர் ஹில்மி கூறினார்.
இதெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. மாரா கல்லூரிகள் இருக்கும் போது நிபுணர்களை பற்றி நமக்குக் கவலை வேண்டாம்!
காலியாகும் மருத்துவ நிபுணர்கள் ஒவ்வோர் இடத்துக்கும் ‘திறமை’ வாய்ந்த 15 ‘ம’ பேர்வழிகளைக் கொண்டு மருத்துவமனைகளை தூ வழியச் செய்யலாமே…
இதையே பயன்படுத்தி இன்னமும் நிறைய நிபுணர்களை உருவாக்கும் UMNO . ம இ கா வும் , மா சி ச வும் வெக்கம் இல்லாமல் சத்தியம் செய்யும். இதுதான் சரி என்று !