ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம்: அம்னோ மேலாதிக்கத்தை தகர்த்தெரிய பெர்சே 5 பேரணியே சிறந்த வாய்ப்பு!

 

Hindraf People's Movement Logoகடந்த  செப்டம்பர் 15 இல், சிகப்புச் சட்டைக்காரர்கள் ஒரு ஆயிரக்கணக்கான மக்களை  வீதியில்  திரட்டினர், அதன் பின்னர்,   சென்ற வரம் 3-ஆம் தேதி  அவர்கள் மலேசியாகினி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கு மலேசியாகினி பிரதான ஆசிரியர்களிடம் பேசுகையில்   20,000  சிகப்பு சட்டைக்காரர்களோடு  மலேசியாகினி அலுவலகத்தை தரை மட்டமாக்கப் போவதாக அதன் தலைவர்  ஜமால் யுனுஸ் சவால் விடுத்தார். ஆனால் இறுதியில் படாதபாடுப்பட்டு சுமார் 700 பேர்களை மட்டுமே அவர்கள்  சென்ற சனிக்கிழமை  5ஆம் தேதி திரட்டினார். இந்த குறைந்த ஆதரவு  அம்னோவின் தோய்வு நிலையை நன்கு பிரதிபலிக்கிறது  என்று ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின்  சபை உறுப்பினர் என். கணேசன் கூறினார்.

 

இதே போன்ற ஒரு மிரட்டல்  1996-ஆம் ஆண்டு  நவம்பரில் அம்னோ  இளைஞர்  பிரிவு தலைவரால்  மலேசியா  தேர்தல் மேல்முறையீட்டு குழு சீனர் சங்கத்திற்கு

(SUQUI) எதிராக விடப்பட்டது.  இதில் சிலாங்கூர்  சீன சமூக மண்டபத்தை  எரித்துவிடப்  போவதாக மிரட்டினார்.  அப்போதைய அம்னோ  இளைஞர்  பிரிவு தலைவர்  தற்போதைய பிரதமர் நஜிப் துன் ராசாக்  என்பது குறிப்பிடத்தக்கது என்று மேலும் அவர் நினையுறுத்தினார்

 

பிரதமர் நஜிப் துன் ராசாக்  சீனர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும்  இந்தியர்களின் பெரும் பகுதியினரின்  வாக்குகளையும் இழந்துவிட்டார்hindraf1. அம்னோ நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. அதன்  வரலாற்று  வாய்ப்புகளை நாம்  முறியடிக்க வேண்டும்.  ஆகையால் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அனைத்து மலேசியா இந்தியர்களையும் எதிர்வரும்  பெர்சே 5  பேரணியில் பங்கெடுத்து ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க  உறுதுணையாய் இருக்குமாறு கேட்டு கொள்கிறது. இந்த இயக்கம் வேதமூர்த்தியின்  தலைமையில் இருக்கும் ஹிண்ட்ராப்பில் இருந்து  விலகிய ஓர் இயக்கம் என்பதை கணேசன் தெளிவுப்படுத்தினர்.

 

பெர்சே 5 பேரணியில் முன்னாள் அம்னோவின் சகாக்கள்  ஒரு சிலர் இடம்பெற்று இருந்தாலும் அம்னோவின் மேலாதிக்கத்தை உடைக்க இதுவே ஒரு சிறந்த தருணம்.   ஏழை இந்தியர்களுக்கு ஒரு நன்மையையும்  அளிப்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் இந்த பேரணி அப்படி ஒரு விடியலை அவர்களுக்கு உருவாக்க துணை புரியும் என்று நம்பிக்கை இருப்பதாக கணேசன் தெரிவித்தார்.

 

கடந்த காலங்களைக்  காட்டிலும்,  ஏழை இந்தியர்களுக்குகாக புதிய  சீரமைப்புகள் வழி மேலும்    ஆக்கப்பூர்வமாக அரசியல் வியூகங்கள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாரவர்.