நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர், எதிரணி உறுப்பினராக

dr m  முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்  பல    ஆண்டுகளுக்குப்    பிறகு    இன்று   முதன்முறையாக   நாடாளுமன்றம்   சென்றார்   அதுவும்,  எதிரணி   உறுப்பினராக.

22  ஆண்டுகள்  பிரதமராக  இருந்த   மகாதிர்,  நாடாளுமன்ற   உறுப்பினர்களின்   சலுகைகளும்    சட்டவிலக்குகளும்   மீதான   ஒரு  சிறப்புக்  கூட்டத்தில்   கலந்துகொள்வதற்காக  இன்று    நாடாளுமன்றம்   சென்றார்.

அக்கூட்டத்தில்    பெர்சத்து    தலைவர்   முகைதின்   யாசின்,  செம்பூர்னா   எம்பி  ஷாபி    அப்டால்,  பிகேஆர்   தலைவர்   வான்  அசிசா   வான்   இஸ்மாயில்,  டிஏபி   பெருந்  தலைவர்    லிம்   கிட்   சியாங்    என   30க்கு    மேற்பட்ட   எதிரணி    நாடாளுமன்ற    உறுப்பினர்கள்     கலந்து  கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,  முன்னாள்   இரண்டாம்  நிலை   நிதி  அமைச்சர்   அஹ்மட்   ஹுஸ்னி   ஹனாட்ஸ்லாவைக்  காணவில்லை.  பாஸுக்காக  பொக்கோக்   செனா   எம்பி   மாபுஸ்  ஒமார்   மட்டுமே   வந்திருந்தார்.