போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட முகம்மட் ஷாரில் சுகுமாறன் அப்துல்லாவின் பிணத்தை இரண்டாவது முறையாக பரிசோதனை செய்ய அவரின் குடும்பத்தார் ரிம15 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
இதற்காக, ஆகஸ்ட் 19-இல் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முகம்மட் ஷாரிலின் உடல் நேற்று சுங்கை துவா மயானத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு யுனிவர்சிடி மலாயா மருத்துவ மையத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இரண்டாவது பிணப் பரிசோதனை வியாழக்கிழமை நடைபெறும்.
அதன் முடிவின் அடிப்படையில் முகம்மட் ஷாரில் மற்றும் எஸ்.யுவராஜன் ஆகிய இருவரின் மரணம் மீது விசாரணை நடத்தப்படும்.
யுவராஜனின் உடல் தகனம் செய்யப்பட்டு விட்டது. அவ்விருவரின் இறப்பு சந்தேகத்துக்கு இடமளிப்பதாகக் கருதிய முகம்மட் ஷாரிலின் குடும்பத்தார் இரண்டாவது பிணப் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.
மற்றவற்றோடு, முகம்மட் ஷாரிலில் மணிக்கட்டுகளைச் சுற்றிலும் காயங்கள் காணப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர்கள் அவரின் கைகளுக்கு விலங்கிடப்பட்டிருந்ததா என்று வினவுகின்றனர்.
துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசார் கூறுவதால் அவருக்கு விலங்கிட வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது அவர்களின் கேள்வி.
முகம்மட் ஷாரிலும் யுவராஜனும் மலேசிய வன ஆராய்ச்சிக் கழகத்துக்கு அருகில் சந்தேகமான முறையில் நடந்து கொண்டதைக் கண்ணுற்ற போலீசார் அவர்களை விரட்டிச் சென்றதாகவும் அவ்விருவரும் போலீஸ் கார்மீது தங்கள் காரை மோதியதுடன் துப்பாக்கியால் போலீசை நோக்கிச் சுட்டார்கள் என்றும் பதிலுக்கு போலீசார் சுட்டதில் இறந்தார்கள் என்றும் சிலாங்கூர் சிஐடி தலைவர் முகம்மட் அட்னான் அப்துல்லா கூறினார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இக்காலத்தில் video பதிவு கருவி மிகவும் மலிவாக கிடைக்கும் போது ஏன் காவல் வாகனத்தில் இல்லை? இருந்திருந்தால் வாகனத்தை மோதும் போது தெரியுமே? மற்ற படி உண்மை நிலவரத்தை முழுமையாக படம் எடுத்திருக்கலாம்? எல்லாம் நம்ப முடிகிறதா ?
சுகுமாறன் அப்துல்லா என்பதால் குறைவாகா ரிம15 ஆயிரம்தான் வாங்கி இருக்கிறார்கள் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்.