செய்தியாளர் பாதுகாப்புக் குழு (சிபிஜே), அரசாங்கம் இணையச் செய்தித்தளமான மலேசியாகினிக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
போலீசார் மலேசியாகினிமீது குற்றப்புலனாய்வு விசாரணை ஒன்றைத் தொடங்கியிருப்பதை அடுத்து சிபிஜே இவ்வாறு வலியுறுத்தியது.
“மலேசியாகினி சுதந்தரமாக செய்தி வெளியிடுவது நன்மையைக் கொண்டுவரும் என்று நினைக்காமல் அதை மலேசிய ஜனநாயகத்துக்கு மிரட்டலாக நினைப்பது அரசாங்கத்தின் முன்னுரிமைகள் ஒழுங்கற்றுக் கிடப்பதைக் காண்பிக்கிறது”, என சிபிஜே அகப்பக்கத்தில் அதன் முத்த தென்கிழக்காசிய பேராளர் ஷாவுன் சிறிஸ்பின் பதிவிட்டிருந்தார்.
“அரசியல் நோக்கம் கொண்ட இந்த விசாரணையை நிறுத்துமாறு போலீசையும் செய்தியாளர்களுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்தும்படி அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்”, என்றவர் கூறினார்.
அமெரிக்கக் கோடீஸ்வர் ஜார்ஜ் சோரொஸின் ஓபன் சொசைடி அறநிறுவனத்திடமிருந்து மலேசியாகினி நிதியுதவி பெற்றதாகக் கூறப்படுவதை விசாரிப்பதற்காக போலீஸ் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சிகப்பு சட்டையினரே! மலேசியாகினிக்கு மட்டுமல்ல, நல்ல காரியங்கள் புரியும் இயக்கத்திற்கோ, மன்றங்களுக்கோ, கட்சிகளுக்கோ, அல்லது மக்களுக்காக போராடும் தலைவர்களுக்கு எதிராகவோ நீங்கள் நடத்தும் காண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்தவேண்டாம். இதை நிறுத்தினால், அம்னோ செய்யும் அராஜகமும், சர்வாதிகாரமும் வெளியுலகிற்கு தெரியாது.