இன்று காலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாடாளுமன்ற வளாகத்துக்கு மேற்கொண்டிருந்த வருகை எதிரணியினர் நம்பிக்கை இழந்து விட்டதைக் காண்பிப்பதாக அஸலினா ஒஸ்மான் சைட் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டவிலக்கு குறித்து ஆராயும் முயற்சி என்று எதிரணியினர் கூறுவது ஒரு “கண்துடைப்பு” எனப் பிரதமர்துறை அமைச்சருமான அஸலினா கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் எதிரணியினர் நிலை ஆணைகளைப் பயன்படுத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதே முறையாகும்.
“எதிரணியின் மகாதிரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தது , வெளியார் உதவியை நாடும் அளவுக்கு அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டதைக் காண்பிக்கிறது.
“அவர்கள் நிலை ஆணைகளைக் கொண்டு இதை மக்கள் அவையில் விவாதிக்க முனையாதது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை”, என்றாரவர்.
நாடாளுமன்றத்தை கூத்து மேடையாக்கியது நீங்கள் அதில் எந்த கூத்தாடி கூத்தாடினால் என்ன நாடாளுமன்றத்திற்கு போவதே டைம் பாஸ் பண்ணதானே
அமெரிக்காவை போன்று மலேசியாவிலும் மாற்றம் வேண்டும் மக்களே. உணருங்கள். இல்லையேல் எப்போதுமே முட்டாளாகவே இருப்பீர்கள்.