முன்னே இருந்தவர்களும் தோற்றுப் போனார்கள்: 2012 நீதிமன்றத் தீர்ப்பை ஜாஹிட்டுக்கு நினைவூட்டுகிறது பெர்சே

bersihபெர்சே   தன்னைச்    சட்டவிரோத  அமைப்பு   என்று   அறிவிக்க  முயன்று    அரசாங்கம்    தோற்றுப்போனதைத்   துணைப்  பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்  ஹமிடிக்கு     நினைவுப்படுத்தியது.

உள்துறை   அமைச்சருமான   அஹ்மட்  ஜாஹிட்,  பெர்சேயும்   பெர்சேயை   எதிர்க்கும்   சிவப்புச்  சட்டை     இயக்கமும்   1966    சங்கப்  பதிவுச்   சட்டத்தின்கீழ்  பதிவு   செய்யப்படாத   அமைப்புகள்    என்பதால்    அவை  பேரணி   நடத்தத்   தடை  விதிக்கப்படுவதாகக்  கூறியதை   அடுத்து    பெர்சே  அதை   நினைவுப்படுத்தியது.

“துணைப்  பிரதமர்   மறந்து   போயிருந்தால்   அவருக்கு   நினைவூட்டுகிறோம்,  பெர்சே   சங்கப்  பதிவகத்தில்  பதிவு   செய்யப்படாத   ஓர்  அமைப்பு    என்பது     2012-இலேயே   எழுப்பப்பட்ட       விவகாரம்தான்.

“பெர்சேயைச்    சட்டவிரோத    அமைப்பாக    அறிவிக்கும்     அப்போதைய   உள்துறை  அமைச்சர்   ஹிஷாமுடின்   உசேனின்  முடிவை   உயர்  நீதிமன்றம்   தள்ளுபடி   செய்தது”,  என  பெர்சே   ஓர்   அறிக்கையில்   கூறியது.

எனவே,     2012   அமைதிப்  பேரணிச்   சட்டத்தின்கீழோ  1966   சங்கப்  பதிவுச்  சட்டத்தின்கீழோ    பெர்சே  அல்லது   சிவப்புச்   சட்டையினர்   பேரணி   நடத்துவதற்கு   தடை   விதிக்கும்   அதிகாரம்     உள்துறை  அமைச்சருக்கு  இல்லை   என   அது  கூறிற்று.

மரியா  சின்  அப்துல்லாவைத்   தலைவராகக்   கொண்ட  பெர்சே    1965ஆம்  ஆண்டு  நிறுவனங்களின்   சட்டத்தின்கீழ்    பதிவு    செய்யப்பட்டிருக்கிறது.  ஆனால்,  சுங்கை  புசார்   அம்னோ   தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்   தலைமையில்   செயல்படும்   சிவப்புச்   சட்டை  இயக்கம்    எதிலும்   பதிவு   செய்யப்படாதது.