மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில் நச்சுத்தன்மை அதிகம்

cookingமறுசுழற்சி   செய்யப்பட்ட    சமையல்  எண்ணெய்  விஷத்தன்மை   மிக்கது   அதை    உட்கொள்வதால்   கல்லீரல்  அழற்சி,  புற்றுநோய்,  மாரடைப்பு   போன்றவை  ஏற்படலாம்.

மறுசுழற்சி   செய்யப்பட்ட   சமையல்  எண்ணெயில்   விஷத்தன்மை    அதிகம்   என்பதால்  அது  இரத்தக்  குழாய்களில்   அடைப்பை   உண்டாக்கலாம்,  இரத்த   அழுத்தத்தை    அதிகரிக்கலாம்    என  மலேசிய   முஸ்லிம்   மருத்துவர்   சங்க (பெர்டிம்)  மத்திய   செயல்குழு  உறுப்பினர்   டாக்டர்  சுபைதி   அஹ்மட்  கூறினார்.

“மறுசுழற்சி   செய்யப்பட்ட   சமையல்  எண்ணெயின்   பாதுகாப்புக்கும்  அது   சுத்தமானதுதான்   என்பதற்கும்   உத்தரவாதமில்லை.  அது  உணவகங்களிலும்    தங்குவிடுதிகளிலும்   கிடைக்கும்   கழிவு    எண்ணெயைக்  கொண்டு   தயாரிக்கப்படுவது”,  என்றவர்   பெர்னாமாவிடம்   தெரிவித்தார்.

தரமான  எண்ணெயை   மறுசுழற்சி    செய்யப்பட்ட   சமையல்   எண்ணெயிலிருந்து   வேறுபடுத்திப்  பார்ப்பது  கடினம்.  சோதனைக்  கூடங்களில்தான்   அதைத்   துல்லியமாகக்  கண்டறிய   முடியும்.

ஆனாலும்,  பயனீட்டாளர்கள்   சொந்தத்தில்   ஒரு   சோதனை   செய்து   பார்க்கலாம்.  தாங்கள்  பயன்படுத்தும்   சமையல்   எண்ணெயை   சுமார்  இரண்டு   மணி    நேரம்   ஒரு    குளிர்பதனப்  பெட்டியில்   வைக்க   வேண்டும்.

அதன்   பின்னர்   வெளியில்     எடுக்க    வேண்டும்.  சமையல்   எண்ணெய்   மேல்பகுதியில்   நுரை   நிரம்பி  இருந்தால்  அது     மறுசுழற்சி   செய்யப்பட்ட   சமையல்   எண்ணெய்தான்   என்று  அவர்  விளக்கினார்.