அரசாங்க மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமுமில்லை எனச் சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டாக்டர் சென் சாவ் மின் தெரிவித்தார்.
அதேவேளை வசதிக்குறைந்தவர்களுக்கும் தொற்று நோய் கண்டவர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் மாணவர்களுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறுக்கு முந்திய- பிந்திய சிகிச்சைகளுக்கும் ஒரு வயதுக்குக் குறைவான பச்சிளம் பிள்ளைகளுக்கும் மருத்துவக் கட்டணம் கிடையாது என டாக்டர் சென் கூறினார்.
இன்னொரு நிலவரத்தில் சுகாதாரத் தலைமை இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா, செப்டம்பர் 30 முடிய அரசாங்க மருத்துவமனைகளில் 4,474 மருத்துவ நிபுணர்கள் இருந்ததாகக் குறிப்பிட்டு அது போதாது என்றும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.

























