வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பினாங்கு அரசு செலவிட்ட ரிம40 மில்லியன் வீண் விரயம், கெராக்கான் குற்றச்சாட்டு

floodபினாங்கு   அரசு    கடந்த   ஐந்தாண்டுகளில்  வெள்ளத்தடுப்புத்   திட்டங்களுக்காகக்       கிட்டத்தட்ட   ரிம40  மில்லியன்  செலவிட்டும்      அப்பிரச்னைக்கு    இன்னும்   தீர்வு    காணப்படவில்லை   என   கெராக்கான்   கூறியது.

அக்கட்சியின்  மாநிலச்   செயலாளர்   ஹொங்  சீ    வெய்,     பினாங்கு   பட்ஜெட்    2011-இலிருந்து   2015  வரை   ஆறுகளை   ஆழப்படுத்தவும்    வெள்ளத்தடுப்புக்காகவும்   ரிம38  மில்லியன்   செலவிடப்பட்டதாகக்  கூறுவதைச்   சுட்டிக்காட்டினார்.

“செலவு  செய்த  பணமெல்லாம்   வீண்  விரயம்”,  என்றாரவர்.

மக்கள்  பணம்  வீணடிக்கப்பட்டதற்கு   பினாங்கு   அரசுதான்   பொறுப்பு   என்றவர்   குற்றஞ்சாட்டினார்.

திங்கள்கிழமை  பினாங்கில்   கடந்த   இரண்டு   வாரங்களில்   நான்காவது    தடவையாக    திடீர்  வெள்ளம்   ஏற்பட்டது.