ஈப்போ மருத்துவமனையில் மின்கசிவு

ipohநேற்றிரவு   ஈப்போ  ராஜா  பெர்மைசுரி  பைனுன்    மருத்துவமனையில்    மின்கசிவு   ஏற்பட்டதால்   5பி   ஆண்கள்  மருத்துவக்கூடத்தில்   இருந்த  நோயாளிகள்   அங்கிருந்து   அப்புறப்படுத்தப்பட்டனர்.

படுக்கைகளுக்கு    அருகில்   சுவரில்  இருந்த   ஒரு   ‘பிளக்’கில்     அந்த  மின்கசிவு   ஏற்பட்டதாக   சுகாதார    தலைமை   இயக்குனர்   ஹிஷாம்  அப்துல்லா  கூறினார்.

அச்சம்பவத்தில்  நோயாளிகள்    அல்லது   மருத்துவமனை   பணியாளர்கள்   எவரும்  காயமடையவில்லை  என்றாரவர்.

“அங்கிருந்த  நோயாளிகள்   வேறு   ஒரு  கூடத்துக்கு   மாற்றப்பட்டிருக்கிறார்கள். மின்கம்பி   இணைப்புகள்  பரிசோதிக்கப்பட்டு    வருகின்றன”,  என்றவர்  பெர்னாமாவிடம்   தெரிவித்தார்.