பொறியாளர் ஒருவர் தன் காதலியின் பிள்ளையை அடித்ததுடன் அப்பிள்ளைக்கு சோறுடன் பொறித்த கரப்பான் பூச்சிகளையும் உணவாகக் கொடுத்தாராம்.
அதன் தொடர்பில் அந்த 36-வயது ஆடவர் பினாங்கு, ஜார்ஜ்டவுனில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவர் ஒரு வரைகோலால் 100 சுமார் தடவை அந்த எட்டு வயது பிள்ளையை அடித்திருக்கிறார். பிள்ளையின் கைகளில் , நெஞ்சில், முதுகில் அடிபட்ட காயங்கள் காணப்படுவதாக ஒரு வட்டாரத்தை மேற்கோள்காட்டி சினார் ஹரியான் அறிவித்திருந்தது.
தாயார் பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது காயங்களைக் கண்ட மருத்துவர் போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பிள்ளை அடிக்கப்பட்டது தாயாருக்குத் தெரியும் ஆனால், பிள்ளையைத் திருத்துவதற்காகத்தான் அடிக்கிறார் என அவர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாராம்.


























“MALAYSIA BOLEH”