மலேசியாவில் சுமார் 2 மில்லியன் தற்காலிக அன்னிய தொழிலாளர்கள்

zahid2016   செப்டம்பர்   30  முடிய,    மலேசியாவில்    தற்காலிக   வேலை   அனுமதிகள்    வைத்திருந்த    அன்னிய   தொழிலாளர்கள்    எண்ணிக்கை   1,854, 684.

இவர்களுக்கு   குடிநுழைவுத்   துறை    தற்காலிக   வேலை  அனுமதி(பிஎல்கேஎஸ்)களை   வழங்கியுள்ளது    என    உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   கூறினார்.

பிஎல்கேஎஸ்    வைத்திருப்போரில்   அதிகமானோர்   இந்தோனேசியர்கள் (749,266).  அவர்களை   அடுத்து   நேப்பாளிகள் (411,364).  மூன்றாவது   இடத்தில்   வங்காளதேசிகள்(237,991).

“வெளிநாட்டவரை   வேலைக்கு    வைத்திருப்பது   காலியாக  உள்ள   இடங்களை   நிரப்பும்   ஒரு    தற்காலிக     நடவடிக்கைதான்.  பணிக்காலம்   முடிவடைந்ததும்    வெளிநாட்டார்     அவர்களின்    தாய்நாட்டுக்கே  திரூம்பிச்  சென்று  விட   வேண்டும்”,  என   நாடாளுமன்றத்தில்   கேள்வி  எழுத்துப்பூர்வமாக    தெரிவித்த  பதிலில்  ஜாஹிட்  கூறினார்.