மலேசியாவுக்காக ‘உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும்’ ஈடுபடப் போகிறார் மாற்றுத்திறனாளி

esiahமாற்றுத்திறனாளி   ஏசையா  ஜேக்கப்   பெர்சே  5 பேரணி   நடைபெறும்  நவம்பர்  19வரை   “உண்ணாவிரதமிருந்து   பிரார்த்தனையில்”  ஈடுபடப்  போகிறார்.

அவருடைய  உண்ணாவிரதம்    எதிர்வரும்   ஞாயிற்றுக்கிழமை   நள்ளிரவில்   தொடங்கி    அடுத்து   வரும்   சனிக்கிழமை   முடிவுறும்.

“எல்லாம் வல்ல  இறைவன்   மலேசியாவைக்   காக்க  வேண்டும்   என்று   வேண்டிக்கொள்ளப்   போகிறோம்.  நாட்டின்   இப்போதைய   நிலவரத்தைக்  கடந்துவர    இறைவன்   உதவி   நமக்குத்   தேவை”,  என்று   கூறிய    அவர்  மலேசியாவை  அலைக்கழிக்கும்   பல்வேறு   பிரச்னைகளைப்  பட்டியலிட்டார்.