பக்கத்தான் மாநாட்டில் பாஸ் கலந்து கொள்ளாது

convenசனிக்கிழமை   நடைபெறும்  பக்கத்தான்  ஹராபான்  மாநாட்டில்   பாஸ்  கலந்து  கொள்ளப்போவதில்லை     என்பதை   பாஸ்    தகவல்    தலைவர்   நஸ்ருடின்  ஹசான்   உறுதிப்படுத்தினார்.

“நாங்கள்  கலந்து   கொள்ளப்போவதில்லை.  காரணம்   டிஏபி.  டிஏபியிடன்   நாங்கள்   உறவுகளைத்   துண்டித்துக்கொண்டு   நீண்ட   காலமாயிற்று”,  என்றவர்    இன்று   நாடாளுமன்ற   வளாகத்தில்    செய்தியாளர்களிடம்   தெரிவித்தார்.

ஹராபான்   மாநாடு    ஷா  ஆலம்   ஐடீல்  மாநாட்டு   மண்டபத்தில்     நடைபெறுகிறது.

அதில்  கலந்து  கொள்ள   பாஸ்,  பார்டி  பிரிபூமி  பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)   இரண்டையுமே    ஹாராபான்   அழைத்துள்ளது.