இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மலேசியாகினி தலைமைச் செய்தியாசிரியர் ஸ்டீபன் கான், கினிடிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களால் பார்க்கப்பட்ட ஒரு காணொளி தொடர்பில் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
அக்காணொளி கைருடின் அபு ஹசான் நடத்திய செய்தியாளர் கூட்டத்தின் ஒளிப்பதிவு. “கைருடின்: அபாண்டி அலி ஏஜியாக இருக்கும் தகுதியற்றவர்” என்ற தலைப்பைக் கொண்டது.
அக்காணொளி, ஜூலை 27-இல் ஆங்கிலத்திலும் பகாசா மலேசியாவிலும் கினிடிவியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
காணொளியை ஒளியேற்றிய கினிடிவியின் இயக்குனர் என்ற முறையில் மேலும் இரு குற்றச்சாட்டுகள் கான்மீது சுமத்தப்பட்டன.
செஷன்ஸ் நீதிபதி ஜமான் முகம்மட் நூர் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரிம2,000 பிணையில் கானை விடுதலை செய்தார்.