நாடாளுமன்றத்தில் ஊழல்: லிப் எங் குற்றச்சாட்டு

lip engநாடாளுமன்ற   வளாகத்தில்   வாகனங்களை  நிறுத்த  கையூட்டு   கொடுக்க   வேண்டியிருப்பதாகக்   கூறி   மக்களவையில்   பரபரப்பை   உண்டு  பண்ணினார்   லிம்  லிப்   எங்  (டிஏபி- செகாம்புட்).

“பொதுமக்களில்  சிலர்   இங்கு  கார்களை  நிறுத்த   முனைகிறார்கள்.   முடிவதில்லை.   ஏனென்றால்   கார்  நிறுத்த   இடங்கள்  இருப்பதில்லை.   பாதுகாவலர்கள்    கார்  நிறுத்தும்   இடங்களை   அடைத்து  வைத்து   விடுகிறார்கள்.

“அதன்  பின்னர்  கார்  நிறுத்த  இடம்  கொடுப்பதற்கு   ரிம10  வாங்குகிறார்கள்”,  என்று   லிம்   கூறிக்கொண்டார்.

இக்குற்றச்சாட்டுக்கு   ஆதாரங்கள்  உண்டு.  அதை   உறுதிப்படுத்த   சாட்சிகளும்   இருக்கிறார்கள்   என்றாரவர்.

மக்களவைத்  துணைத்    தலைவர்   ரோனால்ட்  கியாண்டி,  இவ்விவகாரத்தை   விசாரிக்குமாறு   நாடாளுமன்ற  நிர்வாகத்தைப்   பணித்தார்.