கியூபா நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ட்ரோ தமது 90 ஆவது வயதில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
கியூபாவை ஒரு புரட்சிகரமான கம்யூனிச நாடாக உறுவாக்கி 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த கேஸ்ட்ரோ அமெரிக்காவின் பரமவிரோதியாக கருதப்பட்டார். அவர் காலமான செய்தியை அவரது இளைய சகோதரரும் கியுபாவின் தற்போதைய அதிபருமான ரவுல் கேஸ்ட்ரோ நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டில் குடற்புண் வியாதியால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிலிருந்த கேஸ்ட்ரோ ஈராண்டுக்குப் பின்னர் அதிபர் பதவியை தமது இளைய சகோதரரிடம் ஒப்படைத்தார்.
இரவு மணி 10.29 க்கு கியூபா புரட்சித் தலைவர் பிடல் கேஸ்ரோ மரணமடைந்தார் என்று அரசு தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் கேஸ்ட்ரோ அறிவித்தார்.
பிடல் காஸ்ட்ரோவின் மரணத்திற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
1959 ஆம் ஆண்டு கியூபாவில் நடந்த புரட்சியில் ஆட்சியைக் கைப்பற்றிய பிடல் 49 ஆண்டுகளுக்கு கியூபாவில் ஒரு கட்சி ஆட்சிமுறையை உருவாக்கி இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தார். கியுபா மலர்ந்தது. சிலரால், குறிப்பாக அமெரிக்கர்கள், வெறுக்கப்பட்டார். அவரை கொலை செய்வதற்கு அமெரிக்கா மேற்கொண்ட 16க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
அமெரிக்காவால் வெறுக்கப்பட்டாலும் உலகின் பல நாடுகள், குறிப்பாக தென் அமெரிக்க நாடுகள், அவருக்கு பலத்த ஆதரவு அளித்து அவருடன் நட்பு கொண்டிருந்தன. இந்தியாவுடனும் அதன் பிரதமர் இந்திரா காந்தியுடனும் மிக நெருக்கமான உறவு அவருக்கு இருந்தது.
ஒரு மாபெரும் போராளிக்கு தலை வணங்குகிறேன் !!!