பிரதமர் நஜிப்பை அவமதிப்பதாக கூறப்படும் கேலிச் சித்திரங்கள் கொண்ட கண்காட்சியை நடத்தியதற்காக கேலிச் சித்திர கலைஞர் ஸூல்கிப்லி அன்வார் அல்ஹாக் (ஸூனார்) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தண்டனைச் சட்டம் தொகுப்பு செக்சன் 504 இன் கீழும் கைது செய்யப்பட்டார். இப்பகுதி வேண்டுமென்றே அவமதிப்பு செய்து அதன் வழி அமைதியைக் கெடுக்கும் நோக்கத்தை குற்றமாக்குகிறது.
இதற்கு முன்னதாக ஜாலான் பட்டாணியிலுள்ள ஸூனார் நோர்த்ஈஸ்ட் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.
பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ஸீ ஸீன் அளித்துள்ள தகவல்படி போலீஸ் இப்போது ஸூனாரின் சித்திர வேலைகளை கைப்பற்றும்.
“இப்போது போலீஸ் ஸூனாருடன் கொம்டாருக்குச் சென்று அவருடைய சித்திர வேலைகளை கைப்பற்றும். அது ஏசியா கோமிக் மியூசியம் கொம்டார் லெவல் 3 இல் இருக்கிறது”, என்று சிம் கூறினார்.
ஸூனாரை செரி டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் பிரதிநிதிக்கிறார்.
துன் மகாதீர் மீது இல்லாத பயம், இந்த ஸுனாரை நினைத்தால், சிலுவார் நனைந்து விடுகிறது அல்தான்துயா நஜீப்பிற்கு.
ZUNAR தி BRAVE MAN அல்தான்துயா சுருங்கி நடுங்கி இவரை கைது செய்திருக்கிறான் …….