பினாங்கு, கொம்டாரில் நடந்த ஸூனாரின் கேலிச் சித்திரக்கலைக் கண்காட்சி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அம்னோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சூர் கூறினார்.
இதற்கு முன்னதாக, ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் மீது நாடாளுமன்ற வளாகத்தில் துணை அமைச்சர் தஜூடின் அப்துல் ரஹ்மானின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கும் அம்னோவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூ நான் கூறியிருந்தார்.
ஸூனாருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் மத்திய அம்னோவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இது நாடாளுமன்றத்தில் நடந்தது போலத்தான் (காலிட் சாமாட் தாக்கப்பட்டது) என்றாரவர்.
“நாங்கள் இதற்கு ஊக்கம் அளிக்கவில்லை. இது எங்களுடைய வேலை இல்லை”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் பஹாமி பாட்ஸில் சமீபத்தில் நடந்த பல சம்பவங்களில் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக அம்னோ ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஸூனருக்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு மத்திய அம்னோவிற்கு
சம்பந்தமில்லை என்றால் ,,,,,,,,,,,, ? மாநில அம்னோ மீது பழியை போடுகிறாரா ????
அம்னோ நாதாரிகள் என்றுமே அறிவோடு-புத்தி சுவாதீனத்தோடும் பேசியது கிடையாது– அவன்களை கொஞ்சம் உயர்வாக பேசினால் அவன்களுக்கு கால்கள் தரையில் படியாது– இந்த 60 ஆண்டுகளில் நாம் வந்தேறிகளாகியது தான் மிச்சம்.
ஸுனார் கேலி சித்திரம் உண்மையை கூறும். உண்மைதான் கசப்பாகிற்றே.