ஸூனாரை நான்கு-நாள் தடுத்த வைக்க விரும்பியது போலீஸ், ஆனால் கிடைத்தது ஒரு நாள்தான்

zunarபிரதமர் நஜிப்   அப்துல்  ரசாக்கை     அவமதித்த    குற்றத்துக்காக    தேச  நிந்தனைக்  குற்றம்   சாட்டப்பட்ட   கேலிச் சித்திர கலைஞர் ஸூல்கிப்லி அன்வார் அல்ஹாக் (ஸூனார்)கை   நான்கு  நாள்   தடுத்து    வைத்து  விசாரிப்பதற்கு   அனுமதி   கோரி   போலீசார்    மனுச்  செய்தார்கள்.

ஆனால்,  மூத்த   உதவிப்  பதிவாளர்   முகம்மட்  ஹரித்   முகமட்  மஸ்லான்   ஒரு-நாள்  மட்டுமே    அவரைத்  தடுத்து  வைக்க  அனுமதி   கொடுத்தார்.

ஸுனார்  வாக்குமூலம்   பதிவு   செய்யப்பட்டதும்   இன்று  மாலையே   வெளிவந்து   விடலாம்    என   அவரின்   வழக்குரைஞர்   ராம்கர்பால்   சிங்   கூறினார்.

இதனிடையே,  ஸூனாரின்  கண்காட்சிக்குள்    அத்துமீறி  நுழைந்து    அட்டகாசம்   செய்த  பினாங்கு   அம்னோ   இளைஞர்    உறுப்பினர்களின்   செயல்களையும்  போலீஸ்  கவனத்தில்   கொள்ள    வேண்டும்   என்று   ராம்கர்பால்    வலியுறுத்தினார்.

“அதன்மீது   நடவடிக்கை   எடுக்க   புகாருக்காக   அவர்கள்   காத்திருக்க  வேண்டியதில்லை”,  என்றாரவர்.