மலேசியா கைப்பிள்ளகள் விற்பனை மையமா? ஐஜிபி மறுப்பு

igpஅல்-ஜசீரா   தொலைக்காட்சியில்   மலேசியாவை   கைப்பிள்ளைகளின்   விற்பனை  மையம்   என்று  சித்திரிக்கப்பட்டதை   போலீஸ்   படைத்   தலைவர்  காலிட்   அபு   பக்கார்     நேற்றிரவு   மறுத்தார்.

இவ்விவகாரத்துக்கு     எதிராக   அரச   மலேசிய    போலீஸ்   கடும்     நடவடிக்கை   எடுத்து    வந்திருப்பதாக      அவர்   சொன்னார்.

நாட்டில்   கைப்பிள்ளைகள்    விற்கப்படும்   சம்பவங்கள்   நடப்பதை     அவர்   மறுக்கவில்லை.  ஆனால்   அதில்  கூறப்பட்டதுபோல்    இந்த  விற்பனையைச்   செய்வது   எளிதானதல்ல    என்றார்.  போலீசார்   ஆள்கடத்தல்,  குடியேறிக்  கடத்தல்  பிரிவு  ஒன்றை   உருவாக்கியிருப்பதும்   குற்றப்   புலன்  விசாரணைத்  துறையில்   பாலியல்,  மகளிர்,  குழந்தைகள்   விசாரணைப்  பிரிவு  அமைக்கப்பட்டிருப்பதும்   இதற்குத்   தெளிவான   சான்றுகள்    என்றார்.

இதனிடையே,  சுகாதார   அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்ரமணியம்   அந்த  ஆவணப்  படத்தில்   விவரிக்கப்பட்ட   விவகாரங்களைச்  அமைச்சு  கடுமையாகக்  கருதுகிறது  என்றார்.

அதில்  குறிப்பிடப்பட்ட  மருத்துவர்கள்    மற்றும்    மருத்துவமனைகள்மீது    விசாரணை   தொடங்கப்பட்டிருப்பதாகவும்   அமைச்சர்    தெரிவித்தார்.