நிலச் சரிவுகளால் சிரம்பான் மக்கள் அச்சம்

serambanசிரம்பான்   தாமான்  செனாவாங்   பகுதி   குடியிருப்பாளர்கள்   இருவர்,  கடந்த     சில    நாள்களாக     அடிக்கடி   நிகழும்   நிலச்  சரிவுகள்   குறித்து    அச்சம்  கொண்டிருக்கிறார்கள்.  தங்கள்  வீடுகள்   விழுந்து  விடுமோ    என்ற   அச்சம்தான்.

அவர்களில்  ஒருவரான   நஸ்ரி    முகம்மட்   ரெட்ஸா,36,      நவம்பர்    16-இல்   தன்   வீட்டுக்குப்   பின்புறமுள்ள    சாக்கடை     தடுப்புச்   சுவர்   இடிந்து  விழுந்ததை     அடுத்து   நேற்றுவரை   நிலச்  சரிவுகள்   ஏற்பட்டு   வருவதாகக்  கூறினார்.

“நவம்பர்    16-இல்  என்  தம்பி  கடும்   மழையினால்   வீட்டுக்குப்  பின்புறம்    சாக்கடைத்    தடுப்புச்  சுவர்    சரிந்து   விட்டதாகக்  கூறினான்.

“அது   நடந்த   10  நாளில்,  மண்  நகர்ச்சி   ஏற்பட்டது   நிலச்   சரிவுகளும்   அடிக்கடி    நிகழ்ந்தன.  சமையறை  தரை   விரிசல்   கண்டது”,  என  நேற்று   பெர்னாமாவிடம்    தெரிவித்தார்.

அதே  பகுதியில்   வசித்து  வரும்    லாய்  ஹெங்   சாட் ,71,  அங்குள்ள   நிலவரத்தைக்  கண்டு  தாமும்   தம்   மணைவியும்   கலவரம்   அடைவதாகக்  கூறினார்.