வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் கலகம் செய்ததற்காக தடுத்து வைக்கப்பட்ட 11 பேரையும் போலீசார் விடுவித்துள்ளனர்.
அந்த பதினோரு பேரும் ஒருநாள் லாக்- அப்பில் வைக்கப்பட்டு சனிக்கிழமை விடுவிக்கப்பட்டதை ஒரு போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தியதாக ஓரியெண்டல் டெய்லி கூறியது.
எட்டு ஆடவர்களும் மூன்று பெண்களும் அடங்கிய அக் கும்பல் வெள்ளிக்கிழமை போலீசில் சரணடைந்தது. அவர்களை விசாரணைக்காக நான்கு நாள் தடுத்து வைக்க போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றிருந்தனர்.
வியாழக்கிழமை அக்கும்பல் நாடாளுமன்ற வளாகத்தில் ஷா ஆலம் எம்பி காலிட் சமட்டைத் தாக்க முற்பட்டனர்.
அவர்கள் தங்களை விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் தாஜுடினின் மகன் பைசல்.
மாமியார் வீட்டில் விருந்து முடிந்து வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். இப்படிதான் நடக்கும் என்பதை முன்னரே அறிந்ததுதானே.
அவர்கள் நல்லவர்கள் . ஒரு நாள் விசாரணையே அதிக பட்சம் .