பாஸும் அதன் பங்காளிக் கட்சியான பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா(ஈக்காத்தான்)வும் அரசியல் நன்கொடை மற்றும் செலவினச் சட்டத்தை (பிடிஇஏ) விரைவில் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றன.
அந்த உத்தேச சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாத மக்களவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் இன்று காலை அக்கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் இந்நடவடிக்கை நம் நாட்டில் மோசமான புற்று நோயாக மாறியுள்ள பண அரசியலையும் ஊழலையும் ஒழிப்பதற்கு அவசியம் என்பது ககாசானின் கருத்து.
“எனவே, முடிந்தால் அச்சட்டத்தை அடுத்த ஆண்டு முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்திலேயே கொண்டு வர வேண்டும் என ககாசான் கேட்டுக்கொள்கிறது” என்றாரவர். ககாசான் என்பது பாஸூம் ஈக்காத்தானும் அமைத்துள்ள கூட்டணியாகும்.
அச்சட்டத்தை விரைவாகக் கொண்டு வந்தால் எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலிலேயே அதைச் செயல்படுத்த வசதியாக இருக்கும் என துவான் இப்ராகிம் கூறினார்.
அச்செய்தியாளர் கூட்டத்தில் அவருடன் பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான், ஈக்காத்தான் தலைவர் அப்துல் காடிர் பாட்சிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நடக்குமா? எல்லாமே வீண் எதிர்பார்ப்பு– நீதி தரை மட்டும் நியாயமாக நடந்தால் இந்த நாடு சிறிதளவாவது மதிக்கப்படும்.
*துறை