பெர்சத்துவைச் சேர்த்துக் கொள்வது குறித்து ஹராபான் விவாதிக்கும்

harapanபக்கத்தான்  ஹராபான்  பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து) வை  எதிர்க்கட்சிகள்  கூட்டணியில்    உறுப்புக்கட்சியாக    சேர்த்துக்  கொள்வது   குறித்து    அடுத்த   வாரம்  விவாதிக்கும்.

பார்டி  அமனா  நெகரா(அமனா)   துணைத்    தலைவர்   சலாஹுடின்   ஆயுப்,   பெர்சத்து   சேர்வதால்  டிஏபி,  பிகேஆர்,  அமனா  ஆகியவை   அடங்கிய   பக்கத்தான்  ஹராபான்   மேலும்   வலுப்பெறும்    என்றார்.

அதன்  பின்னர்,   பக்கத்தான்   ஹராபான்  எதிரணிக்கென   ஒரு  அடையாளச்  சின்னத்தைச்  சங்கப்  பதிவாளர் (ஆரஓஎஸ்)  அலுவலகத்தில்   பதிவு   செய்யும்  என  சலாஹுடின்   கூறினார்.  எதிரணி   வேட்பாளர்கள்    எதிர்வரும்    பொதுத்    தேர்தலில்   அச்சின்னத்தைப்  பயன்படுத்திக்   கொள்வார்கள்.

“ஆர்ஓஎஸ் (பதிவு  செய்வதை)   தாமதப்படுத்தாது   என்று   நம்புகிறேன். பக்கத்தான்  ஹராபானைப்   பதிவு   செய்ய  முயன்றபோது  எந்த   ஒரு  விளக்கமுமின்றி  அதை   அங்கீகரிக்க  மறுத்தது   நினைவிருக்கிறது”,  என  சலாஹுடின்  கூறினார்.