மரியா விடுதலை செய்யப்பட்டார்

 

mariareleasedசோஸ்மா சட்டத்தின் கீழ் பத்து நாட்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்யப்பட்டு தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திலிருந்து இன்று மதியம் அவர் விடுவிக்கப்பட்டார் என்று மரியாவின் வழக்குரஞர் அம்பிகா தெரிவித்தார்.

“முதலில், அவருடைய (மரியாவின்) வாக்குமூலத்தை பதிவு செய்யப் போவதாக அவர்கள் கூறினர். அதனால், அவருடன் இருப்பதற்காக நான் உள்ளே சென்றேன். அவர்கள் அவருடைய வாக்குமூலத்தைத் பதிவு செய்தனர்.

“அதன் முடிவில், அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவு அவர்களுக்கு இடப்பட்டது. நாங்கள் உண்மையிலேயே அதிர்ச்சிmariareleased1 அடைந்தோம்”, என்று அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.

விடுவிக்கப்பட்ட மரியா பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது மூன்று மகன்களும் அவரை வரவேற்றனர்.

மரியா டாத்தாரன் மெர்தேக்கவுக்கு வருகிறார்

டாத்தாரன் மெர்டேக்காவில் இன்றிரவு மணி 8.00க்கு தொடங்கவிருக்கும் மெழுகுவத்தி விழிப்பு திட்டமிட்டபடி நடைபெறும். அதில் மரியா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரியா நவம்பர் 18 இல் கைது செய்யப்பட்டார்.