சோஸ்மா சட்டம் 2012 இன் கீழ் தம் மீது மேற்கொண்ட விசாரணை நிறுத்தப்படும் என்று போலீஸ் அவரிடம் தெரிவித்தாக மரியா கூறினார்.
பத்து நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று மரியாவை போலீஸ் விடுதலை செய்தது.
“என்னிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவர்கள் என்னை விடுதலை செய்தனர். வேறு வகையான விசாரணை தொடரும் என்றும் அவர்கள் கூறினர்”, என்று மரியா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தம்மை போலீசார் மீண்டும் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யுமா என்பது குறித்து அவரால் எதுவும் உறுதியாகக் கூற முடியவில்லை.
போலீஸ் மேற்கொண்ட விசாரணை பற்றி கூறிய மரியா, அவர்கள் ஒரேவகையான கேள்விகளை கைது செய்த பின்னரும் விடுதலை செய்யப்படும் வரையிலும் கேட்டனர்.
தாம் அளித்த பதில் அவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை – பெர்சேயின் கணக்குகள், குளோபல் பெர்சே, ஜியோர்ஜ் சோரோ விவகாரங்கள். தங்களுக்கு அவர்களுடன் இன்னும் தொடர்புகள் இருப்பதாக போலீசார் நினக்கிறார்கள் என்றாரவர்.
அவர்கள் தங்களிடமிருந்து கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டனர். இன்னேரம், அவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும் என்று மரியா மேலும் கூறினார்.
மரியா ஒரு சிறிய, ஜன்னல் இல்லாத, படுக்கை இல்லாத, தனி அறைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று அவரது வழக்குரைஞர்கள் கூறிக்கொண்டுள்ளனர்.
மரியா நன்கு கவனிக்கப்படுவதாகவும், படுக்கை கொடுக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு ஒரு பிரதி குரானும் கொடுக்கப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் கூறியிருந்தார்.