ஐஜிபி: மரியா துப்பாக்கித் தோட்டவைக் கையில் பிடித்திருக்கக் கூடாது; தடயம் அழிந்து விட்டது

igpபெர்சே     தலைவர்    மரியா   சின்     அப்துல்லா     கொலை  மிரட்டலாக  வந்த  துப்பாக்கித்   தோட்டா  ஒன்றைக்  கையில்   ஏந்தி   அனைவரிடமும்   காண்பித்தது      தவறு   எனப்  போலீஸ்   படைத்   தலைவர்   காலிட்  அபு   பக்கார்   கண்டித்தார்.

அவரது   செயலால்   அதிலிருந்த   தடயம்   அழிந்து  விட்டது    என்றாரவர்.

“அடுத்த  முறை   இப்படி   எதையும்  கண்டால்  துப்பாக்கித்   தோட்டாவைக்  கையில்  எடுத்து   எல்லாரிடமும்   காண்பிக்க    வேண்டாம்.  அதில்  உள்ள  கைரேகை   எங்களுக்குத்   தேவை.

“அவர்   (தோட்டாவை) கையில்  எடுத்து   எல்லாரிடமும்   காண்பித்தார்.  இப்போது   அவருடைய    ரேகைதான்   அதில்  இருக்கும்.  அதனால்,   எதுவும்  செய்யாதீர்கள்,  அப்படியே   வைத்திருந்து    எங்களிடம்   விசாரணைக்குக்  கொடுத்து   விடுங்கள்.  தடயத்தைக்  கெடுக்கக்  கூடாது.

“இப்போது   நாங்கள்  எதை வைத்துத்   தேடுவது?   அவருடைய   கைரேகைதான்   இருக்கும்”,  என்று  இன்று  காலை    செய்தியாளர்களிடம்   காலிட்   கூறினார்.

மரியாவுக்கு   வந்த  கொலை  மிரட்டல்  குறித்து   கருத்துரைத்தபோது  அவர்   இவ்வாறு  கூறினார்.

கொலை  மிரட்டலை   போலீஸ்    நிச்சயம்  விசாரிக்கும்    என்றாரவர்.