சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை(ஜாயிஸ்) மேற்கொண்ட இரண்டு தனித்தனி அதிரடிச் சோதனைகளில் கால்வாத் குற்றத்துக்காக பிடிபடுவதைத் தவிர்க்க முயன்ற ஒரு போலீஸ்காரர் இறந்தார், இன்னொருவர் காயமடைந்தார்.
இன்று அதிகாலை சிலாங்கூர், பாண்டான் பெர்டானா அடுக்ககத்தின் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் ஜயிஸ் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியபோது புக்கிட் ஜாலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கீழே தரையில் கிடப்பதைக் கண்டனர்.
அடுக்கக வீட்டில் இருந்த பெண் அவரை தன்னுடைய காதலர் என்று கூறினார்.
தரையில் படுகாயமுற்றுக் கிடந்த அவர் அம்பாங் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டார். ஆனால், படுகாயமடைந்திருந்த அவர் காலை 6.45 அளவில் உயிரிழந்தார்.
இன்னொரு சம்பவத்தில், தாமான் பூச்சோங்கில் ஜாயிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க ஒரு போலீஸ் அதிகாரி மாடியிலிருந்து குதித்தார்.
குதித்ததில் படுகாயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பெரித்தா ஹரியான் கூறியது.
…… மதத்தின் உச்சக்கட்டம்.
வீட்டிற்குள் நடப்பதை கண்னோட்டமிட புகுந்ததினால் வந்த விளைவு போலும்!
மனிதன் மதத்திலேறி தனி மனித சுதந்திரத்தைத் தடுத்தால் மனிதன் மதத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்து விடுவான்.
அப்புறம் என்னதான் சட்டம் போட்டாலும் அந்த சட்டம் துர்சட்டமாகவேத் திகழும். துர்சட்டத்தால் மதம் காலப் போக்கில் மக்கள் மனதிலிருந்து மறைய நேரிடும்.
vanakkam
அதிரடிச் சோதானையா? அல்லது அடித்து அடித்து சோதனையா?