ரிம 2.6 பில்லியனை ஏன் செக்‌ஷன் 124சி-இன்கீழ் விசாரணை செய்யவில்லை: விளக்கம் கேட்கிறார் அம்பிகா

ambikaஅன்னிய   நிதியளிப்பின்மீது    மிகுந்த   கவனம்   செலுத்தப்பட்டு  வரும்   வேளையில்  ரிம2.6பில்லியன்    விவகாரம்   என்னவாயிற்று   என   உள்துறை  துணை   அமைச்சர்   நூர்  ஜஸ்லான்   முகம்மட்    விளக்கமளிக்க    வேண்டும்    என  வழக்குரைஞர்   மன்ற   முன்னாள்    தலைவர்   அம்பிகா   ஸ்ரீநிவாசன்     வலியுறுத்தினார்.

மலேசியாகினியிடம்   பேசிய   அம்பிகா,  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  வங்கிக்  கணக்கிலிருந்து   ரிம2.6 பில்லியன்   கடந்த   பொதுத்   தேர்தலுக்குப்  பயன்படுத்திக்கொள்ளப்பட்டது   என்பது   ஒப்புக்கொள்ளப்பட்ட   ஒரு  விசயம்   என்றார்.

“அன்னிய   நிதியளிப்பு     மீது    மிகுந்த  கவனம்    செலுத்தப்படும்    இவ்வேளையில்,       நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்குக்  கேடு   செய்யும்  செயல்   என்ற  வகையில்  இந்த   ரிம2.6 பில்லியன்  நிதியளிப்பு   மீது   குற்றவியல்   சட்டத்தின்   பிரிவு  124சி-இன்கீழ்   ஏன்  விசாரணை   தொடங்கப்படவில்லை  என்பதைத்   துணை  அமைச்சர்   பொதுமக்களிடம்  விளக்கக்    கடமைப்பட்டுள்ளார்”,  என  அம்பிகா   கூறினார்.

தேர்தல்   சீரமைப்புக்காக    போராடும்  பெர்சே,   வழக்குரைஞர்   மன்றம்,   மலேசியாகினி    ஆகியவை    அமெரிக்கக்  கோடீஸ்வரர்   ஜார்ஜ்  சோரோஸின்   ஓபன்   சொசைடி   அறநிறுவனத்திலிருந்து     நிதியுதவி   பெற்றதாக   சட்டப்பிரிவு   124சி-இன்கீழ்   விசாரணை   செய்யப்பட்டு  வருகின்றன.