ஜெயலலிதா காலமானார்

 

jayalalithaதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றிரவு மணி 11.30 அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார். 68 வயதான ஜெயலலிதா கடந்த 73 நாட்களாக மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்தார்.

மூவர்ண தேசிய கொடியால் போர்த்தப்பட்டிருந்த அவரது நல்லுடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்து.. ஆராத்துயரில் ஆழ்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் சிந்தி அழுதனர். பலர் மயக்கமுற்று விழுந்தனர்.

ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை மணி 4.30 க்கு சென்னை மரீனா பீச்சில் அவரது அரசியல் குருவான எம். ஜி. ஆர் சமாதி வளாகத்தில் நடைபெறும் என்று அரசாங்க அறிவுப்பு கூறுகிறது.

நாட்டின் முக்கிய தலைவர்கள் மறைந்த ஜெயலலிதாவுக்கு தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்துவதற்கு சென்னைக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடி சென்னைக்கு வந்து ராஜாஜி மண்டபத்துக்கு சென்றுள்ளார். அதிபர் பிரணாப் முக்கர்ஜி சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவர் டில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்கு. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தவிருக்கும் முக்கிய தலைவர்களில் ரகுல் காந்தியும் அடங்குவார்.

தமிழ் நாட்டின் நகரங்கள், சென்னை உட்பட, மக்கள் கூட்டத்தால் நிலைகுத்தியுள்ளன.

புதுடில்லியில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் மறைந்த ஜெயலலிதாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர், இரு அவைகளும் அண்ணா திமுகவின் தலைவரும் முன்னாள் மேலவை உறுப்பினருமான ஜெயலலிதாவுக்கு மரியாதை நிமித்தம் ஒத்திவைக்கப்பட்டன.