சிலாங்கூரில் பல நீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் பாதிக்கக்கூடிய தெனாக நேசல் பெர்ஹாட்(டிஎன்பி)டின் மின் நிலைய பராமரிப்பு வேலைகளை செப்டம்பர் மாதத்திலேயே செய்திருக்க வேண்டும் ஆனால், மாநில அரசுதான் பராமரிப்பு வேலைகளைத் தாமதப்படுத்தும்படி கேட்டுக்கொண்டது என்பதை மந்திரி புசார் அஸ்மின் அலி ஒப்புக்கொண்டார்.
அப்படித் தாமதப்படுத்தப்பட்ட வேலைகளை இந்த வாரம் மேற்கொள்வதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிறிஸ்மஸ் கொண்ட்டாட்டத்துக்கு முன்னதாக நீர் விநியோகம் தடைப்படுகிறதே என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணமாகும்.
செப்டம்பரில் லங்காட் 2-இல் வேலைகளை முடிக்க வேண்டியிருந்ததால் சுத்திகரிப்பு ஆலைகளைப் பாதிக்கக்கூடிய பராமரிப்பு வேலைகளைத் தாமதப்படுத்த முடிவு செய்ததாக அஸ்மின் கூறினார்.
அந்த வேலைகளை மேலும் தாமதப்படுத்த முடியாது என்ற நிலை உருவாகியிருப்பதால் இப்போது பராமரிப்பு வேலைகளைச் செய்வது அவசியமாகிறது.
பராமரிப்பு வேலைகளால் நீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மின்சாரம் கிடைக்காது. மின்சாரமில்லாததால் நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.
ஆயினும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி மாநில அரசு பார்த்துக்கொள்ளும் என்று மந்திரி புசார் உறுதியளித்தார்.
பி.என். மீது மக்களுக்கு ஏற்பபட்ட சலிப்பினால்தான் மக்கள் பாக்கத்தனை தேர்வு செய்தார்கள் ! அனால் பாக்கத்தனின் செயல் பாடுகளும் வெகு சிறப்பாக உள்ளது என்று சொல்வதிற்கில்லை ! எடுத்துக்காட்டுக்கு குடி நீர் பிரச்சனையை சொல்லலாம் ! மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்கும் வகையில் நீர் வினியோகத்தை கையாண்டிருக்கலாம் ! ஏமாற்றம்தான் !